Thursday 5 May 2011

திருநகர்


(ஆங்கிலம்:Thirunagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சிஆகும்.

மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,549 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 87% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89%, பெண்களின் கல்வியறிவு 85% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருநகர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

குறிப்புகள்
திருநகர் மதுரையில் இருந்து 8.3 கிமீ தொலைவில் உள்ளது.பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 6.5 கிமீ தொலைவில் உள்ளது.திருநகரின் பரப்பு சதுர வடிவைக் கொண்டுள்ளது. அந்த சதுர வடிவ பரப்பை எட்டு நிறுத்தங்கள் சேர்கின்றன.மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்தில் இருந்து 14.6 கிமீ தொலைவில் உள்ளது.
திரையரங்குகள்
திருநகரில் இரண்டு திரையரங்குகள் உள்ளது.ஒன்று தேவி கலைவாணி அரங்கு மற்றொன்று மணி இம்பாலா பல அடுக்குத் திரையரங்கு.தேவி கலைவாணி திரையரங்கு திருநகர் இரண்டாம் நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மணி இம்பாலா பல அடுக்குத் திரையரங்கு திருநகருக்கு அடுத்து உள்ள ஹார்விபட்டி என்னும் இடத்தில உள்ளது.இத்திரையரங்கு தமிழகத்திலயே முதன் முதலில் "க்யுப்" {பார்க்க( http://www.qubecinema.com/ )} என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.தற்போது இந்த தொழில்நுட்பம் தமிழகத்தில் உள்ள பல திரை அரங்குகளில் உள்ளது.முதலில் இந்த அரங்கு "மணி தியேட்டர்" என்னும் பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது.பின் மே 1,2002 ம் வருடத்தில் "தியேட்டர் மணி இம்பாலா" {பார்க்க(http://www.impalacinemas.com/ or http://www.impalamultiplex.com/ ) என்னும் பெயரால் தொடங்கப்பட்டது.பின்னர் இந்த திரையரங்கை மூன்று அரங்குகளாக உயர்த்தும் பணி நிறைவடைந்து 10.7.2009 அன்று ஆரம்பிக்கப்பட்டது.இந்தப் பெருமையை மதுரை மாவட்டத்தில் பெரும் முதல் திரையரங்கு இது தான்.இந்த மூன்று திரையரங்குகளில் இரண்டு முற்றிலும் குளிரூட்டபட்டது.

தானியங்கி மையங்கள்

திருநகரில் பல  வங்கிகளின் தானியங்கி மையங்கள்  செயல்பட்டு வருகின்றன.திருநகரில் உள்ள வங்கிகளின் தானியங்கி மையங்களின் பெயர்கள் வருமாறு:
        1.கனரா வங்கி, திருநகர் இரண்டாவது நிறுத்தத்தில் உள்ளது .
        2.யூனியன் பேங்க் ஆப் இந்தியா, திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது.
        3.இந்தியன் வங்கி, அண்ணா பூங்கா அருகில் உள்ளது.
        4.ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி,திருநகர் இரண்டாவது நிறுத்தத்தில் உள்ளது .
        5.ஹச்.டி.எப்.சி. வங்கி, திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது .
        6.எஸ்.பி.ஐ. திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது.

வங்கிகள்

திருநகரில் 5 வங்கிகளின் கிளைகள் உள்ளன.மக்கள் வங்கிகளை நாடிச் செல்ல செல்ல வங்கிகளும் பெருகிக் கொண்டே போகின்றன.திருநகரில் உள்ள வங்கிகளின் பெயர்கள் வருமாறு: ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி


1.கனரா வங்கி,திருநகர் இரண்டாவது நிறுத்தத்தில் உள்ளது .
2.பேங்க் ஆப் இந்திய, திருநகர் மூன்றாவது நிறுத்தத்தில் உள்ளது.
3.இந்தியன் வங்கி, அண்ணா பூங்கா அருகில் உள்ளது.
4.மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,காவல் நிலையம் அருகில்.
5.யூனியன் பேங்க் ஆப் இந்தியா, திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது.