Monday 27 March 2017

இந்தியா அபார பந்துவீச்சு ஆஸ்திரேலியா 137க்கு ஆல் அவுட்

 India Vs Australia 4th test

4-வது டெஸ்ட் மூன்றாம் நாள் 

                ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 300 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட துவங்கிய இந்தியா அணி இரண்டாம் நாள் முடிவில் 248 ரன்னுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து இருந்தது.


ஜடேஜா அரைசதம் 

        மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய ஜடேஜாவும், சஹாவும் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 7 வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தனர். நன்கு ஆடி கொண்டிருந்த ஜடேஜா தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.இதில் 4 பௌண்டரிகளும் 4 சிஸேர்களும் அடங்கும் .இந்திய தனது முதல் இன்னிங்சில் 332 ரன்கள் சேர்த்தது.இதனால் ஆஸ்திரேலியாவை விட 32 ரன்கள் இந்தியா அணி முன்னிலை பெற்றது.

இந்தியா பௌலர்கள் அசத்தல் 

       அடுத்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆட துவங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்து இருந்தது. 31 ரன்கள் எடுப்பதற்குள் அந்த 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. பின்னர் இணைந்த மேக்ஸ்வெல் மற்றும் ஹண்ட்ஸகொம்ப ஜோடி சற்று நேரம் தாக்கு பிடித்தது.

இந்த ஜோடி 56 ரன்கள் சேர்த்த நிலையில் ஹண்ட்ஸகொம்ப அவுட் ஆனார் . அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக அந்த அணி 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா அணி சார்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ்,, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை சாய்த்தனர்.

இந்தியாவுக்கு 106 ரன்கள் வெற்றி இலக்கு 

                           106 ரன்கள் என்ற  வெற்றி இலக்குடன் ஆட துவங்கிய இந்திய அணி 6 ஓவர்களை சந்தித்து விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்து இருந்தது. இந்தியாவுக்கு இன்னும் 87 ரன்களே தேவை என்ற நிலையில் நாளை 4ம்  நாள் ஆட்டம் நடை பெறுகிறது. இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகம் ஆகியுள்ளது.





No comments:

Post a Comment