Saturday 25 March 2017

ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு ஆல் அவுட் - 4 வது டெஸ்ட் நிகழ்வுகள்



 India Vs Australia

ஆஸ்திரேலியா டாஸ் ஜெயித்தது 

                  இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முறையே ஆஸ்திரேலியா, இந்தியா ஒரு வெற்றியை பெற்றும் 3வது டெஸ்ட் போட்டி ட்ராவும் ஆனது. இதனால் தொடரனது யார் வசம் என்பதை நிணயிக்கும் 4-வது டெஸ்ட் இன்று தர்மசாலாவில் தொடங்கியது. இந்த போட்டியிலும் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

கேப்டன் ரஹானே 

           3-வது டெஸ்ட் போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியா அணியின் கேப்டன் கோஹ்லி விளையாடவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக செயல்படுகிறார்.

முதல் பாதியில் ஆஸ்திரேலியா கலக்கல் 

              டாஸ் ஜெயித்து ஆட துவங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்கமே அதிர்ச்சி கிடைத்தது நன்றாக பார்மில் இருக்கும் ரென்ஷா யாதவ் பந்துவீச்சில் ஸ்டம்ப்களை இழந்தார். அடுத்து ஆட கேப்டன் ஸ்மித்தும், வார்னேரும் இந்தியா பந்துவீச்சை  பதம் பார்த்தனர். உணவு இடைவேளையின் பொது அந்த அணி 130 ரன்னுக்கு 1 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஸ்மித்தும், வார்னேரும் அரை சாதம் எடுத்தனர்.

இரண்டாம் பாதியில் இந்தியா கலக்கல் 

                     உணவு இடைவேளைக்கு பிறகு இந்தியா பந்துவீச்சாளர்கள் கலக்கினர். அரைசததோடு ஆடி கொண்டிருந்த வார்னர் அவுட் ஆக அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

ஸ்மித் சதம் 

        மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நங்கூரம் பாய்ச்சி நின்ற ஆஸ்திரேலியா கேப்டன் இந்த தொடரில் தனது 3-வது சதத்தை பதிவு செய்தார் .

ஆஸ்திரேலியா  300 க்கு ஆல் அவுட்.

                      பின் வந்த மேத்தியூ வாட் அரை சதம் எடுக்க அந்த அணி 300 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் புதிதாக சேர்க்கப்பட்ட குலதீப் 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

அடுத்து ஆட வந்த இந்தியா முதல் நாள் முடிவில் ஒரு ஓவருக்கு 0 ரன் என்ற கணக்கில் இருந்தது.



No comments:

Post a Comment