Tuesday 28 March 2017

இந்தியா அசத்தல் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது

 India Vs Australia

பார்டர் - கவாஸ்கர் டிராபி  

                    4 டெஸ்டுகளை கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.

தொடர் சமன் 

         முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற தொடர் சமநிலை அடைந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி ட்ரா ஆனது. இதனால் தொடர் வெற்றியை உறுதி செய்யும் போட்டியாக 4 வது டெஸ்ட் அமைந்தது.

4-வது டெஸ்ட் 

           தர்மசாலாவில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 300 ரன்களும், இந்தியா முதல் இன்னிங்சில் 332 ரன்களும் எடுத்தன. ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சில் 137 ரன்களுக்கு சுருண்டது.

106 ரன்கள் வெற்றி இலக்கு 

         இதனால் இந்தியாவுக்கு 106 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்தியா வெற்றி 

          ஆட்டத்தின் நான்காம் நாளான இன்று இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 87 ரன்களே தேவை என்ற நிலையில் ஆட்டத்தை துவங்கியது. ராகுல் அரைசதம் எடுக்க, ரஹானேவின் அதிரடி ஆட்டத்தில் இந்தியா உணவு இடைவெளிக்கு முன்பாகவே வெற்றியை சுவைத்தது .

இந்தியா தொடரை கைப்பற்றியது 

         இந்த வெற்றியின் மூலம் நான்கு டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. மேலும் தொடர்ந்து தர வரிசை பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது.


No comments:

Post a Comment