Sunday 26 March 2017

இந்தியா நிதான ஆட்டம்

4-வது டெஸ்ட் 
 India Vs Australia


          தர்மசாலாவில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்தியா தனது முதல் இன்னிங்னிசை தொடங்கியது.


ராகுல் அரை சதம் 

                  நேற்று முதல் ஆட்ட நேர முடிவில் ரன் கணக்கை துவங்காமல் இருந்த இந்தியா அணி தனது முதல் இன்னிங்க்சை நிதானமாக ஆட துவங்கியது. 11 ரன்கள் எடுத்திருந்த விஜய் ஹாஸ்டிலவூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த புஜாராவும், ராகுலும் நிதானமாக ரன்களை எடுத்தனர்.

                 ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளித்த விளையாடிய ராகுல் அரைசதம் எடுத்தார். அவர் 60 ரன்கள் சேர்த்த நிலையில் அடித்து ஆட முற்பட்டு தன் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த ஜோடி 87 ரன்கள் சேர்த்து.

புஜாரா அரை சதம் 

            இதனை அடுத்து புஜாராவுடன் தற்போதைய கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்தார். நன்றாக ஆடி கொண்டிருந்த புஜாரா தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவர்  57 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். அரை சதம் எடுப்பார்  என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 46 ரன்னுக்கு ஆட்டமிழக்க இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்தியா 248/6

          இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்து இருந்தது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியோன் 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெரும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணி வீரர்களும் வெற்றிக்காக போராடுவார்கள்.

No comments:

Post a Comment