Sunday 19 March 2017

ட்ராவிட்டின் சாதனையை முறியடித்த புஜாரா

                       
 India Vs Australia

                 ராஞ்சியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ட்ராவிட்டின் சாதனையை முறியடித்தார்  புஜாரா.

                      முன்னதாக டாசை ஜெயித்த ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 178 ரன்கள் மற்றும் மேக்ஸ்வெல் 104 ரன்கள் ஆகியோரின் உதவியுடன் அந்த அணி 451 ரன்கள் குவித்தது. அடுத்து ஆட துவங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 120/1 நிலையில் இருந்தது.

                   மூன்றாம் நாள் ஆட்டத்தில் புஜாரா 130, விஜய் 82  ஆகியோரின் உதவியுடன் இந்திய அணி 360/6 ரன்கள் எடுத்து இருந்தது.

 India Vs Australia
புஜாரா இரட்டை சதம் 

             நேற்றைய நான்காம் ஆட்டத்தில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா டெஸ்ட் தொடர்களில் தனது 3வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர் எடுக்கும் 2வது இரட்டை சதம் இதுவாகும்.

சாஹா சதம்
            
                 தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் சாஹாவும் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்க்கு 199 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 7வது விக்கெட்டுக்க்குஎடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கொர் இதுவாகும்.

ட்ராவிட்டின் சாதனையை முறியடித்த புஜாரா 

           இந்த போட்டியில் இரட்டை சதம்  அடித்த புஜாரா 525 பந்துகளை சந்தித்து 202 ரன்கள் எடுத்தார். இதற்கு முன்னதாக டிராவிட் 495 பந்துகளை சந்தித்து 270 ரன்கள் எடுத்ததே, ஒரு இன்னிங்சில் ஒரு இந்தியா வீரர்  அதிக பந்துகளை சந்தித்த சாதனையாக இருந்தது. இதன் முலம் ட்ராவிட்டின் சாதனையை முறியடித்தார்  புஜாரா.


ஜடேஜா அரை  சதம் 

              புஜாராவும்சாஹாவும் அடுத்துதடுத்து விக்கெட்டுக்களை  பறிகொடுக்க அடுத்து வந்த ஜடேஜா அரை  சதம் எடுக்க இந்தியா அணி 603/9 ரன்கள் எடுத்து டேகிளர் செய்தது.

ஆஸ்திரேலி இரண்டாவது இன்னிங்ஸ் 

             தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 23/2 ரன்கள் எடுத்து இருந்தது.இன்று நடக்கும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா மீதம் இருக்கும் விக்கெட்டுக்களை விரைவாக வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.

 ஸ்கொர் விவரம் 

ஆஸ்திரேலி முதல் இன்னிங்ஸ்  - 451
இந்தியா முதல் இன்னிங்ஸ் - 603/9 டெகிளர் 
ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ் - 23/2

ஆங்கிலத்தில் தொடர 




No comments:

Post a Comment